சென்னை: தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கான முட்டை டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. முட்டை டெண்டரில் 6 நிறுவனங்கள் பங்கேற்றள்ளன. சென்னை தரமணியில் உள்ள சமூகநலத்துறை அலுவலகத்தில் டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு ஓராண்டுக்கான முட்டை டெண்டரின் மதிப்பு சுமார் 500 கோடி ஆகும். ஆண்டுக்கு 95 கோடி முட்டை சப்ளை செய்ய வேண்டும். இந்த டெண்டரில் கிறிஸ்டி குழுமத்தை சேர்ந்த கிறிஸ்டி கிஷான், நேச்சுரல் புட், ஸ்வர்ணபூமி ஆகிய 3 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.