டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறப்பு : வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

கும்பகோணம்: டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறக்கப்பட உள்ள நிலையில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழைகாலத்தில் உடைப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணை வரும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ள நிலையில் ஆறுகள், வாய்க்கால்கள், தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி கிடப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கும்பகோணம் அருகே கோரையாற்றில் தரை தெரியாத அளவிற்கு செடிகள் வளர்ந்து இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.

மழைகாலங்களில் தண்ணீர் வடிய வடிகாலாகவும் பயன்படுவதால் கரைகள் உடையும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசு போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்றும், பல இடங்களில் உடைந்துள்ள கட்டுமானங்களை சீரமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: