பிச்சைக்கார வேடமிட்டு குடும்பத்துடன் திருட்டு; 2 பேர் கைது

பூந்தமல்லி: போரூர் சிக்னல் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் காலில் பெரிய கட்டுடன் பிச்சை எடுத்து வந்தார். சிக்னலில் வாகனங்கள் நிற்கும்போது வாகன ஓட்டிகளிடம் பிச்சை கேட்டு தொல்லை கொடுத்ததாக அடிக்கடி போரூர் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில், நேற்று அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார், பிச்சைக்காரனின் காலில் போடப்பட்டிருந்த கட்டை பிரித்துப் பார்த்தனர். அவரது காலில் காயம் ஏதும் இல்லை. காயம் இருப்பது போல மற்றவர்களை ஏமாற்றி பிச்சை எடுப்பதற்காக அப்படி கட்டுப் போட்டது தெரியவந்தது. அவரிடம் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியில் பிச்சை எடுக்கும் பார்வையற்ற மூதாட்டியிடமிருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை திருடியது தெரியவந்தது. மேலும் அவரது தந்தை அதே பகுதியில் சாமியார் வேடமிட்டும் பிச்சை எடுத்து வருவதாகவும், அவரது அக்காவும் பிச்சைக்காரி வேடமிட்டு அதே பகுதியில் பிச்சை எடுத்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. சென்னை பாடி லூகாஸ் பகுதியில் நாக்பூரிலிருந்து ஏராளமானோர் வந்து தங்கியிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுத்து வருகின்றனர். அதில் சிலர் பார்வையற்ற மற்றும் வயதான பிச்சைக்காரர்களிடம் உள்ள பணத்தையும் திருடியதும் தெரியவந்துள்ளது. அந்த பிச்சைக்காரர், அவரது அக்கா இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post பிச்சைக்கார வேடமிட்டு குடும்பத்துடன் திருட்டு; 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: