பழைய பேருந்துகளை பள்ளி வகுப்பறையாக மாற்ற திட்டம்: கேரளாவில் புதிய முயற்சி

திருவனந்தபுரம்: கேரளாவில் பழைய பேருந்துகளை பள்ளி வகுப்பறைகளாக மாற்றும் சோதனை முயற்சி நடைபெறவுள்ளது. கேரளாவில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பழைய தாழ்தள பேருந்துகளை வகுப்பறையாக மாற்ற கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பழைய பேருந்து ஒன்று வகுப்பறை போல் மாற்றி அமைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படும் என கேரள அமைச்சர் அந்தோணி ராஜும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தகவலின்படி, குறைந்தது 400 அரசு சாலை போக்குவரத்து கழக பேருந்துகள் வெவ்வேறு டிப்போக்களில் செயலிழந்து கிடக்கின்றன. சமீபத்தில், அவற்றில் சில பேருந்து பணியாளர்களுக்கான ஓய்வு அறைகளாக மாற்றப்பட்டு, வெற்றிகரமான மகளிர் சுய உதவித் திட்டமான குடும்பஸ்ரீக்கு கஃபேக்கள் வாடகைக்கு விடப்பட்டன என்று தெரிவித்தார். கோடை விடுமுறையைத் தொடர்ந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும்போது, அவர்களுக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும் என்றும் பயன்படுத்தப்பட்ட பேருந்துகளை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தலாம் என்றும் கூறினார். நாங்கள் அதை சோதனை அடிப்படையில் செய்கிறோம். திருவனந்தபுரத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு பேருந்துகள் வழங்கப்படும். மலப்புரம் மாவட்டமும் இரண்டு பேருந்துகளை நாடியுள்ளது. இது குழந்தைகளுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார். இதற்கு மாணவர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். …

The post பழைய பேருந்துகளை பள்ளி வகுப்பறையாக மாற்ற திட்டம்: கேரளாவில் புதிய முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: