பந்திபூர் வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை ஆக்ரோஷமாக துரத்திய ஒற்றை காட்டு யானை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை அடுத்துள்ளது கர்நாடகாவின்  பந்திப்பூர் புலிகள் காப்பகம். இங்கு வாகன சவாரியில் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் சென்று வன வனப்பகுதியையும்,  வன விலங்குகளையும் கண்டு ரசிக்க முடியும்.  இந்நிலையில்  சுற்றுலா பயணிகள் பந்திபூர் வனப்பகுதிக்குள் சென்று கொண்டிருந்த போது யாரும் எதிர்பார்காத நேரத்தில்  ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றுலா பயணிகள் சென்ற  வாகனத்தை ஆக்ரோஷமாக துரத்தி உள்ளது. நீண்ட தூரம் துரத்திய காட்டு யானை ஒரு கட்டத்தில் நின்று அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது . அதிர்ஷ்ட வசமாக தப்பிய சுற்றுலா பயணிகள் இந்த காட்சியை செல்போனில் படம் எடுத்துள்ளனர்.  இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது….

The post பந்திபூர் வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை ஆக்ரோஷமாக துரத்திய ஒற்றை காட்டு யானை appeared first on Dinakaran.

Related Stories: