நீதிபதி வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் மாயம்...சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீதிபதி வீட்டிற்கு கொண்டு சென்ற வழக்கு ஆவணங்கள் மாயமானது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்றவர் மதிவாணன். இவர் விசாரித்த 100-க்கும் மேற்பட்ட வழக்கு ஆவணங்கள் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கு ஆவணங்கள் நீதிபதியின் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டதாக, பிறகு காணாமல் போனதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அபோது சிபிஐ தொடர்பான ஆவணங்கள் பல காணாமல் போனது குறித்தும் நீதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதை அடுத்து நீதிபதி வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் மாயமாகி இருப்பதால் இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: