நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்

தூத்துக்குடி, நவ. 26: தூத்துக்குடி தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் மாப்பிள்ளையூரணியில் ‘நீட் விலக்கு நமது இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கம் நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதிஸ்டாலின் வேண்டுகோள்படி, தூத்துக்குடி எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி, மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஆகியோர் வழிகாட்டுதல்படி மாப்பிள்ளையூரணி திமுக அலுவலகத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ரவி(எ)பொன்பாண்டி தலைமையில் ‘நீட் விலக்கு நமது இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் மனோகரன், துணை அமைப்பாளர்கள் செந்தில்குமார், ஜெகதீஸ் ராயன், பிரபாகரன், ஜீவாபாலமுருகன், சுடலை, சிறப்பு அழைப்பாளராக கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணகுமார் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி பாலா, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: