நான் செய்தது சரிதான் : புல்லிபாய் மாணவன் அதிரடி

ேபாபால்: சர்ச்சைக்குரிய ‘புல்லிபாய் ஆப்’பை உருவாக்குவதற்கு மூளையாக செயல்பட்ட மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவன் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளான். ‘புல்லிபாய் ஆப்’பில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த செயலிக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் உடனடியாக, அந்த ஆப் தடை செய்யப்பட்டது. இந்த செயலியை உருவாக்கியது தொடர்பாக மாயாங் ராவல் (21), ஸ்வேதா சிங் மற்றும் விஷால் குமார் ஜா ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், புல்லிபாய் செயலியை உருவாக்குவதில் மூளையாக செயல்பட்ட நீரஜ் பிஸ்னோய் என்ற பிடெக் மாணவனை போலீசார் நேற்று முன்தினம் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாத்தி கைது செய்தனர். இவன் மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் செயல்படும் பிரபல பொறியியல் கல்லூரியில் பிடெக் 2ம் ஆண்டு படித்து வருகிறான். புல்லிபாய் ஆப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது வெளிச்சத்துக்கு வந்ததோடு, அவன் கைதும் செய்யப்பட்டதால் கல்லூரி நிர்வாகம் அவனை நேற்று சஸ்பெண்ட்  செய்துள்ளது. இவன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘புல்லிபாய் ஆப்பை நான் உருவாக்கியதில் என்ன தவறு? அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நான் செய்தது சரிதான். அதனால், என்னை கைது செய்ததற்காக வருந்தவில்லை,’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறான்….

The post நான் செய்தது சரிதான் : புல்லிபாய் மாணவன் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: