சென்னை: பல்கலை. மானியக்குழுவிற்கு பதிலாக உயர்கல்வி ஆணையம் அமைத்தால் தமிழகம் பாதிக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. உயர்கல்வி ஆணையம் அமல்படுத்தப்பட்டால் மாநில உரிமை பாதிக்கப்படும் என சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பல்கலைக்கழங்களுக்கு கிடைக்கும் நிதி ஆதாரம் கேள்விக்குறியாகும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.
