தேசிய பங்கு சந்தை முறைகேட்டில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர், தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2013 முதல் 2016ம் ஆண்டு வரை பணியாற்றிவர் சித்ரா ராமகிருஷ்ணன். அப்போது அவர், அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை முறைகேடாக ஆலோசகராகவும், முன்னாள் செயலாக்க அதிகாரியாகவும் நியமித்து பிற சலுகைகள் வழங்கியதாகவும், இமயமலையில் உள்ள சாமியார் ஒருவரின் அறிவுறுத்தலின்படி முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) புகார் தெரிவித்தது.  இதையடுத்து, மும்பையில் உள்ள சித்ராவின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விசாரணையில் சித்ரா தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ கடந்த 24ம் தேதி சென்னையில் கைது செய்தது. இதனால், சித்ரா தான் கைது செய்யப்படுவதில் இருந்து தப்ப முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த சனிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை நேற்று முன்தினம் இரவு சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் நேற்று அவரை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த சிபிஐ அதிகாரிகள் நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தினர். இன்னும் பல கேள்விகளுக்கு சித்ரா பதில் அளிக்காததால் அவரை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. இதற்கு மறுப்பு தெரிவித்த டெல்லி நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி சஞ்ஜீவ் அகர்வால், 7 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்….

The post தேசிய பங்கு சந்தை முறைகேட்டில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: