தூத்துக்குடி 41வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மக்கள் குறைகேட்பு

தூத்துக்குடி, ஆக. 11: தூத்துக்குடி மாநகராட்சி 41வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி 41வது வார்டுக்குட்பட்ட வி.இ ரோடு, ரைஸ்மில் தெரு பகுதியில் கழிவுநீர், கால்வாய், தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு உள்ளது. அதை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக சரி செய்து நிறைவேற்றி தரப்படும். இந்த பகுதிக்கு திமுக ஆட்சி வந்த பிறகு புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை, கால்வாய், வசதிகள் அமைத்து தரப்படும். குடிதண்ணீர் சீரான முறையில் வழங்கப்படும், என்றார்.நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், வட்ட செயலாளர் பொன்ராஜ் மற்றும் மணி, அல்பட், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி 41வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மக்கள் குறைகேட்பு appeared first on Dinakaran.

Related Stories: