திருவைக்காவூர் ஊராட்சியில் மண்ணியாற்றில் தூர் வாரும் திட்டப்பணி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு

 

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருவைக்காவூர் ஊராட்சியில் மண்ணியாற்றில் தூர் வாரும் திட்டப்பணிகளை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, திருவைக்காவூர் ஊராட்சியில் நீர்வளத்துறை சார்பில் மண்ணியாற்றில் 5 கிலோ மீட்டர் அளவில் ரூ.15.5 லட்சம் மதிப்பீட்டிலும், மண்ணியாற்றில் இருந்து பிரிந்து வரும் நீலத்தநல்லூர் பாசன வாய்க்கால் 5 கிலோ மீட்டர் அளவில் ரூ.5.7 லட்சம் மதிப்பீட்டிலும் தூர்வாரும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

பணிகளை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் யோகேஸ்வரன், உதவி பொறியாளர் பூங்கொடி, பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, விஏஓ ரமேஷ், பணி ஆய்வாளர் முருகன், பாசன உதவியாளர்கள் ராமலிங்கம், பாலாஜி மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருவைக்காவூர் ஊராட்சியில் மண்ணியாற்றில் தூர் வாரும் திட்டப்பணி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: