திருவாடானை திருவெற்றியூரில் சுறுசுறுப்பாக நடக்கும் சுகாதார நிலைய பணி

திருவாடானை, ஜூன் 8: திருவாடானை அருகே திருவெற்றியூரில் ரூ.35 லட்சம் செலவில் ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. பாகம்பிரியாள் கோயில் முன்பாக இந்த சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் கட்டிடம் சேதமாகி இடிந்து விழுந்து விட்டது.

இதையடுத்து அந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து அதே இடத்தில் பழுதான கட்டிடத்தை அகற்றி விட்டு தற்போது ரூ.35 லட்சம் செலவில் ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே கோரிக்கையை ஏற்று இங்கு கட்டப்படும் ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம் தரமாக கட்டப்பட்டு வருகிறதா என உரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவாடானை திருவெற்றியூரில் சுறுசுறுப்பாக நடக்கும் சுகாதார நிலைய பணி appeared first on Dinakaran.

Related Stories: