திருப்பதி, பெங்களூரு, தூத்துக்குடி உள்பட 9 ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு:  தெற்கு ரயில்வே சார்பில் 9 ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது. அவை முறையே சென்னை சென்ட்ரல்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (5 பெட்டிகள்), சென்னை சென்ட்ரல்-மைசூர் சூப்பர் பாஸ்ட் ரயில் (5 பெட்டிகள்), எர்ணாகுளம் – பெங்களூரு சூப்பர்பாஸ்ட் ரயில் (5 பெட்டிகள்) ஆகியவற்றில் வரும் 20ம் தேதி முதல் இந்த வசதி நடைமுறைக்கு வருகிறது. தூத்துக்குடி- மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 முன்பதிவற்ற பெட்டிகள் இணைப்பு 21ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதேபோல் 20ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல்-ஆந்திரா சூப்பர்பாஸ்ட் ரயிலில் 4 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. வரும் 20ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல்-விஜயவாடா தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 முன்பதிவற்ற பெட்டிகள் நடைமுறைக்கு வருகிறது. மன்னார்குடி-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 பெட்டிகள் வரும் 24ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. கோவை-திருப்பதி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 முன்பதிவற்ற ெபட்டிகள் வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதேபோல் சென்னை சென்ட்ரல்-திருப்பதி தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 ெபட்டிகள் வரும் பிப்ரவரி 20ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post திருப்பதி, பெங்களூரு, தூத்துக்குடி உள்பட 9 ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: