திண்டுக்கல்லில் 72 சதவீதம் வரி வசூல்

திண்டுக்கல், பிப். 29: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடப்பு நிதியாண்டிற்கான நிலுவையில் உள்ள வரி இனங்களை வரும் பிப்.29ம் தேதிக்குள் நூறு சதவீதம் வசூல் செய்ய நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி திண்டுக்கல் மாநகராட்சியில் 2023-2024 நடப்பு நிதி ஆண்டிற்கான செலுத்தப்பட வேண்டிய வரி, வரையற்ற இனங்கள் பொதுமக்கள் விரைவாக செலுத்த வசதியாக 17.02.2024 முதல் 29.02.2024 வரை அனைத்து சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கணினி வரிவசூல் மையங்கள் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை 72 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post திண்டுக்கல்லில் 72 சதவீதம் வரி வசூல் appeared first on Dinakaran.

Related Stories: