அன்னூர் பகுதியில் அரசு பள்ளிகளுக்கு சாக்பீஸ் பெட்டிகள் வழங்கல்

 

அன்னூர், ஜூன் 12: கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளான அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி, கெம்பநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் உயர்நிலைப்பள்ளி, அன்னூர் தெற்கு தொடக்கப்பள்ளி, நாகம்மாபுதூர் தொடக்கப்பள்ளி, அச்சம் பாளையம் தொடக்கப்பள்ளி, முதலிபாளையம் தொடக்கப்பள்ளி, கணேசபுரம் தொடக்கப்பள்ளி, தெலுங்குபாளையம் தொடக்கப் பள்ளி,

பிள்ளையப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி, கரியாம்பாளையம் தொடக்கப்பள்ளி மற்றும் கிருஷ்ணகவுண்டன்புதூர் தொடக்கப்பள்ளிகளுக்கு சமூக ஆர்வலர் கோபால் மற்றும் அகம் கன்சல்டன்சி விஜய் பாபு இணைந்து ஒருவருடத்திற்கு தேவையான ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள சாக்பீஸ் பெட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகர் வசம் வழங்கினர். ஜெகதீஷ், நாகராஜ், ஜெயபால் மற்றும் சரவணன் உடனிருந்தனர்.

The post அன்னூர் பகுதியில் அரசு பள்ளிகளுக்கு சாக்பீஸ் பெட்டிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: