போரூர், ஜூன் 28: தரமணி பறக்கும் ரயில் நிலைய நுழைவாயில் அருகில், ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த ஒருரை பிடித்து விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் திரிபுராவை சேர்ந்த முஜகிதுள் இஸ்லாம் (29) எனவும், வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
The post தரமணி ரயில் நிலையத்தில் கஞ்சா விற்றவர் சிக்கினார்: 6 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.
