ரஜினியின் 2.O நவம்பர் 29ல் ரிலீஸ்

சென்னை: ரஜினியின் 2.0 படம் நவம்பர் 29ம் தேதி திரைக்கு வர உள்ளது. இத்தகவலை இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உட்பட பலர் நடித்துள்ள படம் 2.0. சங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் முடிந்துவிட்டது. இந்நிலையில், படத்தில் இடம் பெறும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் கடந்த ஓராண்டாக நடந்து வந்தது.

இப்படம் அடுத்த ஆண்டு தான் திரைக்கு வரும் என தகவல் பரவியது. இந்நிலையில், இயக்குனர் சங்கர் நேற்று இரவு தன்னுடைய ட்விட்டர் பதிவில் ‘கிராபிக்ஸ் நிறுவனத்தார் தங்கள் பணி எப்போது முடிவடையும் என்பதை தெரிவித்துவிட்டனர். ஆகவே இந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி 2.0 திரைக்கு வருகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: