தமிழ்நாட்டில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 4,601 பாசனக் குளங்கள் நிரம்பின

சென்னை: தமிழ்நாட்டில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 4,601 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100% நிரம்பியுள்ளன. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1340 பாசனக் குளங்களில் 830 குளங்கள் நிரம்பின. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 641 பாசனக் குளங்களில் 403 குளங்கள் முழு கொள்ளளவுடன் நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 564 பாசனக் குளங்களில் 421 குளங்கள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. திருவண்ணாமலை 397, திருவள்ளூர் 302, கடலூர் 61, காஞ்சி 279, தென்காசி 236, ராணிப்பேட்டை 219, சிவகங்கை 211, புதுக்கோட்டை 174, கள்ளக்குறிச்சி 125, திண்டுக்கல் 99, விழுப்புரம் 139, கிருஷ்ணகிரி 78, நெல்லை 75, தேனி 66, சேலம் 65, கன்னியாகுமரி 33, நாமக்கல், பெரம்பலூரில் தலா 30 குளங்கள் நூறு சதவீதத்தை எட்டி நிரம்பியுள்ளன. …

The post தமிழ்நாட்டில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 4,601 பாசனக் குளங்கள் நிரம்பின appeared first on Dinakaran.

Related Stories: