தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் மே 12ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், புதிதாக தேர்வான உறுப்பினர்களுக்கு மே 11ம் தேதி பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 159 இடங்களில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. 75 இடங்களில் அதிமுக வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகவும் 33 எம்எல்ஏக்கள் அமைச்சராகவும் நேற்று பதிவியேற்றுக் கொண்டனர். பதவியேற்றதிலிருந்து அதிரடி நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.இச்சூழலில் இன்று சட்டப்பேரவை செயலர் வெளியிட்ட அறிக்கையில், மே 11ஆம் தேதி சட்டப்பேரவை கூடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது தற்காலிக சபாநாயகர் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார். தற்காலிக சபாநாயகராக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இருப்பார் என்று முன்பு தகவல் வெளியானது. ஆனால் திடீரென்று கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மே 10ஆம் தேதி காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோர் மே 12ஆம் தேதி தேர்வு செய்யப்படுவர். பிச்சாண்டி தற்காலிக சபாநாயகர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது….

The post தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு..! appeared first on Dinakaran.

Related Stories: