தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி: 6 திட்டங்களுக்கு அடிக்கல்

சென்னை: தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்காக, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரு விளையாட்டு அரங்கில்  பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர், அமைச்சர்கள் பொன்னாடை போற்றி வரவேற்றனர். மோடியை ஆளுநர் ரவி, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மேயர் பிரியா, துணை மேயர், டிஜிபி சைலேந்திர பாபு, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து  பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்னை ஐ.என்.எஸ். கடற்படை தளம் வந்தடைந்தார். சென்னை ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு வந்த பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.  ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் இருந்து நேரு விளையாட்டு  அரங்கம் செல்லும் வழியில் காரில் இருந்து வெளியே வந்து பாஜக தொண்டர்களை நோக்கி பிரதமர் மோடி கை அசைத்தார்.  பின்பு அவர் விழா மேடைக்கு சென்றடைந்தார். பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ள அரசு நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. விழாவில் வரவேற்பு உரையை ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் அளித்தார். அதைதொடர்ந்து தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாறறினார். பின்பு பிரதமர் மோடி அனைத்து திட்டங்களை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். விழாவில் ஒன்றிய அமைச்சர்கள், நிதின் கட்கரி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக முதல்வர் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர். நாட்டக்கு அர்ப்பணித்தல்:* ரூ.506 கோடி மதிப்பில்  மதுரை – தேனி அகல ரயில் பாதை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்* ரூ598 கோடி செலவில் அமைக்கப்பட்ட  சென்னை தாம்பரம் – செங்கல்பட்டு 3வது ரயில் பாதை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்* ரூ.849 கோடி மதிப்பில் எண்ணூர் – செங்கல்பட்டு குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்* ரூ.911 கோடி மதிப்பில் திருவள்ளூர் – பெங்களூரு குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்* ரூ.116 கோடி மதிப்பில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில் 1,152 வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்: * ரூ14,982 கோடி மதிப்பில் சென்னை – பெங்களூரு அதிவிரைவு சாலை திட்டத்திற்கு அடிக்கல் * ரூ5,852 கோடி மதிப்பில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் நான்கு வழி பறக்கும் சாலை திட்டத்திற்கு அடிக்கல் * ரூ. 3,871 கோடி மதிப்பில் தர்மபுரி – நெரலூரு நான்கு வழிப்பாதை திட்டத்திற்கு அடிக்கல்* ரூ.724 கோடி மதிப்பில் மீன்சுருட்டி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு அடிக்கல்* ரூ.1803 கோடி மதிப்பில் சென்னை, எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, குமரி ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு அடிக்கல் …

The post தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி: 6 திட்டங்களுக்கு அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: