தஞ்சையில் கால்நடை தீவன தொழிற்சாலைகள்.. பால் உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி நிலையங்கள் : சட்டப்பேரவையில் அறிவிப்பு!!

சென்னை : தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படும் என பால்வளத்துறை மானிய கோரிக்கையின் அறிவிப்பில் அமைச்சர் சா.மு.நாசர் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமிப்புத்துறை, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பால் வளத்துறை ஆகியவை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது.இதில் பால் வளத்துறை   துறைகளின் மீதானா சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு சா.மு. நாசர் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிட்டார்.அப்போது பேசிய அவர், ‘சென்னையில் ஒரு நாளைக்கு சராசரியாக 13 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது இதனை 2021 22 ஆம் ஆண்டில் 15 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.ஆவின் பொருட்களை துபாய் ,அபுதாபி, ஓமன் அமெரிக்காவின்  கலிபோர்னியா போன்றமேலை நாடுகளில் வினியோகம் செய்ய முதற்கட்ட நடவடிக்கைகள் முடிக்கப் பட்டிருக்கிறது.கொரோனா தோற்றால் உயிரிழந்த ஒருவரின் வாரிசை உட்பட 47 பால்வளத்துறை கீழ்வரும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு இருக்கிறதுகிட்டத்தட்ட கடைசி எட்டு ஆண்டுகளாக உயிரிழந்த பால்வளத் துறை ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 200 புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படும்’, என்றார்.பால்வளத்துறை அறிவிப்புகள்*பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் முக்கியமான சேவைகளில் ஒன்றான அவர்கள் இலங்கைக்கு நேரடியாக சென்று கால்நடைகளுக்கு இலவச மற்றும் அவசர சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த 162 நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தடங்கள் ஒருவரை 6 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்*பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் உற்பத்தித் திறனில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை 25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.*பால் பண்ணையில் நாளொன்றுக்கு இரண்டு மெட்ரிக் டன் அளவில் நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுடன் கூடிய இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரத்துடன் கூடிய அலகு 8 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.*செறிவூட்டப்பட்ட பால் பொருட்களான மோர், தயிர், கப் தயிர் தயாரிக்கும் அதிநவீன இயந்திரங்களுடன் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.*அம்பத்தூர், சோழிங்கநல்லூர், திருச்சி மற்றும் கோயம்புத்தூர் பால் பண்ணைகளில் திரட்டுப் பால் தயாரிக்க நவீன சவ்வூடு வடிகட்டுதல் தொழில்நுட்பத்துடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.*பால் பொருட்கள், சிப்பம் கட்டும் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் கான ஆய்வுக்கூடம், ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம், நுண்ணுயிரியல் பகுப்பாய்வு ஆய்வுகூடம் அம்பத்தூர் பால்பண்ணையில் 10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.*பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பணியாளர்கள் மற்றும் அலுவலருக்கு உற்பத்தி தொடர்பான பயிற்சிக்காக விழுப்புரம், மாதவரம், வேலூர் ஆகிய இடங்களில் ஆறு கோடி மதிப்பீட்டில் பயிற்சி நிலையங்கள் வலுப்படுத்தப்படும்.*முதல்முறையாக உறுப்பினர்களுக்கு கால்நடை பராமரிப்பு குறித்து குரல் ஒலி மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக இலவச சேவையை அறிமுகப்படுத்தப்படும்.*ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை முறையில் சீர்திருத்தம் மற்றும் விற்பனை விரிவாக்கம் செய்து லாபத்தை ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.*மின் ஆளுமை முறையை கையாண்டு சிக்கனம் மற்றும் நிர்வாகத்தை செம்மைப் படுத்தும் முறைகள் செயல்படுத்தப்படும்.*பால் வளத் துறையில் தொடர்ச்சியாக அதன் வளர்ச்சிக்கு கீழ் நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.*60 தானியங்கி பால் கறக்கும் கருவிகள் வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு 36 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.*வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் தேவைக்காக 2 குளிர் காப்பு மற்றும் மூன்று குளிர்சாதன வசதி வேன்கள் 80 லட்ச ரூபாய் மதிப்பில் வழங்கப்படும்.*தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மன்னார்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று பால் தொகுப்பு குளிர்விப்பான்களை 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும் ஆகிய அறிவிப்புகளை சட்டமன்றத்தில் வெளியிட்டார்….

The post தஞ்சையில் கால்நடை தீவன தொழிற்சாலைகள்.. பால் உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி நிலையங்கள் : சட்டப்பேரவையில் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: