தஞ்சாவூர் புதிய பேருந்து நிலைய அவலம்: குளம்போல் தேங்கிக்கிடக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

தஞ்சாவூர், ஜூலை 12: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் கழிவுநீர் ஓட வழியில்லாததால் சாலையிலே குளம்போல் தேங்கி நின்று தொற்று நோய்களை பரப்புகிறது. ஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும் ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணிகள் பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே செல்லும் பாதையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. அதேபோல் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வழித்தடத்திலும் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கிக்கிடக்கும் கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது. அதேபோல் பேருந்தில் பயணிக்கும் பயணிகளும் அங்கு சாலை ஓரங்களில் சிறுநீர் கழித்து செய்கின்றனர். இதனால் அந்த பகுதி சீர்கேடாக உள்ளது. தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் தற்போது மாநகராட்சி சார்பாக இலவச கழிப்பிடம் கட்டியும் இன்னும் திறக்கவில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அங்கு தேங்கி நிற்கும் கழிவு நீரை சரிசெய்து சிறுநீர் கழிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கட்டி முடிக்கப்பட்ட இலவச கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தஞ்சாவூர் புதிய பேருந்து நிலைய அவலம்: குளம்போல் தேங்கிக்கிடக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: