டெஸ்லாவால் எலான் மஸ்க்கிற்கு வந்த புதிய சிக்கல்: 3.21 லட்சம் மின்சார கார்களை பழுது நீக்குவதற்காக திரும்பப் பெற முடிவு

வாஷிங்டன்: எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம், 3.21 லட்சம் மின்சார கார்களை பழுது நீக்குவதற்காக திரும்பப் பெற உள்ளது. உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக வலைதளமான டிவிட்டரை ரூ.3.50 லட்சம் கோடிக்கு சமீபத்தில் வாங்கினார். இதன் செலவினங்களை குறைப்பதற்காக, உலகம் முழுவதும் டிவிட்டரில் பணியாற்றும் 50% ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். நஷ்டத்தில் இயங்கும் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் அதை மீட்டெடுக்க முயற்சி செய்து வரும் எலான் மஸ்க்கிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரின் டெஸ்லா கார் நிறுவனம் தயாரித்த மாடல் 3 மற்றும் மாடல் ஒய் ரக மின்சார கார்களில் பழுது ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. காரை இயக்க தொடங்கிய பின், பின்பக்க விளக்குகள் ஒழுங்காக செயல்படவில்லை என்ற தவறான சமிக்கையை, காரில் பொருத்தப்பட்டுள்ள கம்யூட்டர் அளிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை சரி செய்ய 3.21 லட்சம் டெஸ்லா கார்களை திரும்பப் பெற்று, ஒரு புதிய சாப்ட்வேர் மூலம் இந்த பிரச்சனையை சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எக்ஸ் மாடல் காரிலும் ஏர்பேக்சிக்கலால் 30ஆயிரம் கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன. இதைப் பற்றிய அறிக்கையை டெஸ்லா நிறுவனம், அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்திடம் சமர்பித்துள்ளது. இந்த காரணத்தால் டெஸ்லா பங்கு மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது. பங்குச்சந்தையில் சரிவு, ட்விட்டரில் பிரச்சினைகள் என எலான் மஸ்கிற்கு சிக்கல் நீண்டு கொண்டே வருகிறது. …

The post டெஸ்லாவால் எலான் மஸ்க்கிற்கு வந்த புதிய சிக்கல்: 3.21 லட்சம் மின்சார கார்களை பழுது நீக்குவதற்காக திரும்பப் பெற முடிவு appeared first on Dinakaran.

Related Stories: