சோலைமலை முருகனுக்கு கார்த்திகை சிறப்பு பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு

 

மதுரை, அக். 21: அழகர்கோவிலில் உள்ள சோலைமலை முருகனுக்கு நடைபெற்ற சிறப்பு கார்த்திகை பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அழகர்கோயில் மலைமேல் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் ஆறாம் படைவீடான சோலைமலை முருகன் கோயிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் நேற்று ஐப்பசி மாத வளர்பிறை காத்திகை மற்றும் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் நடைபெற்றது.

இதில் வித்தக விநாயகர் சன்னதி மற்றும் உற்சவர் சன்னதியான வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கம், மஹா தீபாராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் கோயில் உள் வளாகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக வேல் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

The post சோலைமலை முருகனுக்கு கார்த்திகை சிறப்பு பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: