செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கொரோனா கட்டுப்பாடு கண்காணிக்க குழு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முறையாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்காணிக்க சுகாதார துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். விழாவின் தொடக்க நாளில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை உள்பட 50க்கும் மேற்பட்ட நட்சத்திர விடுதிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி மூலமாக கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. அதன்படி, சுகாதாரத் துறை சார்பில் ஒரு விரிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அதில், வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய வீரர்களை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்த பிறகே நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். நட்சத்திர விடுதிகளில் நோய் பரவல் ஏற்படாமல் இருக்க கண்காணிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த சுகாதார குழுக்கள் சுழற்சி அடிப்படையில் பிரத்யேகமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபடவும், விளையாட்டு போட்டி நடைபெறக்கூடிய மாமல்லபுரம் வரக்கூடிய பார்வையாளர்களுக்கு முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கொரோனா தடுப்பூசி செலுத்தி இருத்தல் உள்ளிட்ட மற்ற பிற கட்டுப்பாடுகளையும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது….

The post செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கொரோனா கட்டுப்பாடு கண்காணிக்க குழு appeared first on Dinakaran.

Related Stories: