வல்லூர் அனல்மின் நிலையத்தில் 500 மெ.வா மின்உற்பத்தி மீண்டும் தொடக்கம்

சென்னை: வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் மீண்டும் 500 மெகாவாட் மின்உற்பத்தி  தொடங்கியது. சென்னை அடுத்த வல்லூர் அனல்மின் நிலையத்தில் தேசிய அனல் மின் கழகமும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு முயற்சியாக 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகின்றன. இந்நிலையில், 2வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக கடந்த மே 23ம் தேதி  500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது பராமரிப்புபணி முடிவடைந்து இரண்டாவது அலகில் 500 மெகாவாட் உற்பத்தி தொடங்கியது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: