சென்னை மெட்ரோ 2-ம் திட்டத்தில் தண்டவாளங்களை அமைக்கும் ஒப்பந்த பணிக்காக ஜப்பான் நிறுவனம் தேர்வு

சென்னை : சென்னை மெட்ரோ இரண்டாம் திட்டத்தில் தண்டவாளங்களை அமைக்கும் ஒப்பந்த பணிக்காக ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவைகளில் 2-ம் கட்ட மெட்ரோ பணிகள் தொடங்கப்பட்டு சில இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. 63,246 கோடி ரூபாய் செலவில் 119 கி.மீ. தொலைவிற்கு மூன்று வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 41 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட இருக்கின்றன. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை ஒரு வழித்தடமும், மாதவரம் முதல் கோயம்பேடு வரை மற்றோரு வழித்தடமும் தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த தண்டவாளங்கள் அமைப்பதற்காகவே ஜப்பானை சேர்ந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த நிறுவனம் வழங்கி இருக்கும் ரயில்கள் பராமரிப்பு செலவு குறைவாகவும், நீண்ட வாழ்நாள் கொண்டதாகவும் இருக்கும். மெட்ரோ முதல் திட்டத்தில் போக்குவரத்து மற்றும் தண்டவாளம் அமைப்பதற்கான ரயில்களை ஒரே நிறுவனமே வழங்கியது. இந்த முறை செலவை குறைத்து தரத்தை அதிகப்படுத்தி நோக்கில் 2 நிறுவனங்களுக்கு இந்த பணிகள் பிரித்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. மெட்ரோ 2-ம் கட்ட பணிகள் 5 ஆண்டுகளுக்குள் நிறைவடைய வாய்ப்பிருப்பதாக சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.  …

The post சென்னை மெட்ரோ 2-ம் திட்டத்தில் தண்டவாளங்களை அமைக்கும் ஒப்பந்த பணிக்காக ஜப்பான் நிறுவனம் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: