செங்குன்றம் காவல் நிலையத்தில் காவலர்களுக்கு ஸ்மார்ட் போன்: மாவட்ட ஆணையர் வழங்கினார்

புழல், ஜன. 4: செங்குன்றம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்குன்றம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெட்ரல் வாகனம், ஜிப்ஸி வாகனம் மற்றும் ஐந்து மையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செங்குன்றம் மாவட்ட ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு காவலர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்கினார். இதனால் காவலர்கள் எந்தப் பகுதியில் தணிக்கை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து அறிந்து கொள்ளவும், காவலர்களை ஒரே நேரத்தில் குரூப் காலில் அழைத்து அறிவுரை வழங்கவும், பொதுமக்கள் மைய காவலரை எளிதில் தொடர்பு கொள்ளவும், இதனால் காவலர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக செல்வதற்கும் இந்த ஸ்மார்ட் போனில் சிறப்பு செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய் கணேஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post செங்குன்றம் காவல் நிலையத்தில் காவலர்களுக்கு ஸ்மார்ட் போன்: மாவட்ட ஆணையர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: