செங்குன்றம் அருகே அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 120 பேருக்கு இலவச சைக்கிள்: மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார்

புழல்: செங்குன்றம் அருகே ஆதிதிராவிடர் நலத்துறையின் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று 120 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார். செங்குன்றம் அருகே வடகரையில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில், பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நேற்று மாலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழகத்தின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு வடகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர்கள் வெங்கட் ரவி, விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்றனர். புழல் ஒன்றிய குழு தலைவர் தங்கமணி திருமால், புழல் ஒன்றிய திமுக செயலாளர் புழல் பெ.சரவணன், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.இதில் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்று, பிளஸ் 2 படிக்கும் 120க்கும் அதிகமான மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் சாந்தி பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மம்மு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அனிதாகுமாரி செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

The post செங்குன்றம் அருகே அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 120 பேருக்கு இலவச சைக்கிள்: மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: