சுதந்திர தினத்தையொட்டி வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் விராலிமலை யூனியன் அலுவலகம்

விராலிமலை,ஆக.15: நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதைப் போற்றும் வகையில் விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் வண்ண வண்ண கலர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் அந்தந்த மாநில முதல்வர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளனர். இதுபோல் தேசியக்கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றுவதற்கு வித்திட்டவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு சென்னை புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்துகிறார். மேலும், பல்வேறு விருதுகள், பதக்கங்களையும் அவர் வழங்குகிறார்.

முன்னதாக, காலை 8.35 மணிக்கு கோட்டை அருகில் வரும் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்று, காவல் துறை அதிகாரிகளை அறிமுகம் செய்துவைக்கிறார். இதனைத் தொடர்ந்து சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், அரசு அலுவலகங்கள், தனியார் தொழிற்சாலைகள், அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் வண்ண வண்ண கலர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

The post சுதந்திர தினத்தையொட்டி வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் விராலிமலை யூனியன் அலுவலகம் appeared first on Dinakaran.

Related Stories: