சென்னை சிவசங்கர் பாபா பயன்படுத்திய லேப்டாப், பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல்; இ-மெயில் கணக்கு முடக்கம் Jun 30, 2021 சிவசங்கர் பாபா சென்னை தின மலர் சென்னை: சிவசங்கர் பாபா பயன்படுத்திய லேப்டாப், பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவசங்கர் பாபாவின் இ-மெயில் கணக்கில் மாணவிகளுக்கு அனுப்பிய ‘ஆபாச சாட்’ சிக்கி உள்ளது என்றும், அதில் மாணவி ஒருவருடன் வீடியோ காலில் பேசியதற்கான ஆதாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இ-மெயில் கணக்கை சிபிசிஐடி போலீசார் முடக்கி உள்ளனர். இந்த விசாரணையின்போது சிவசங்கர் பாபா முழு ஒத்துழைப்பு வழங்கியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் போலீஸ் விசாரணை முடிந்து சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த 16ம் தேதி கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா, அவரை 15 நாட்கள் (ஜூலை 1-ந் தேதி வரை) காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். … The post சிவசங்கர் பாபா பயன்படுத்திய லேப்டாப், பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல்; இ-மெயில் கணக்கு முடக்கம் appeared first on Dinakaran.
மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்
ஆதி திராவிடர், பழங்குடியினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
மாதவரம் – சோழிங்கநல்லூர், கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வழித்தடங்களில் இரட்டை அடுக்கு மேம்பாலம்: 2 ஆண்டுகளில் முடிக்க திட்டம்
வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரூ.4.5 கோடியில் பூங்கா பேருந்து நிலைய பணி: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டம்
பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்: வாகன ஓட்டிகள் அவதி பாலம் அமைத்து தர கோரிக்கை
அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு
தமிழ்நாடு யாதவ மகாசபை செயற்குழுவில் யாதவ மாணவர்களுக்கு யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அளிக்க ரூ.10 லட்சம் நிதியுதவி: மாநில தலைவர் நாசே ராமச்சந்திரன் வழங்கினார்
2ம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதிகள் இருக்கும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்