சித்தூர் துஞ்சத்து எழுத்தன் குருமடத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

 

பாலக்காடு, அக்.25: சித்தூர் சோகநாஷினி நதிகரையோரம் தெற்குக்கிராமத்தில் துஞ்சத்து எழுத்தச்சன் குருமடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுந்தோறும் நவராத்திரி விழா, வித்யாரம்ப விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இங்கு முதற்கல்வி சிறுவர், சிறுமிகள் ஆரம்பம் குறிப்பது என்பது சிறப்பாகும் என்பதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன் துச்சத்து எழுத்தச்சன் குருமடத்தில் முதற்கல்வி கற்பது என்கிற விசேஷத்தால் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை முதற்கல்வியை இந்த குருமடத்தில் ஆரம்பம் செய்து வருகின்றனர்.

பெற்றோர்கள் தங்களது குழந்தையினருக்கு பட்டு ஆடைகள் அணிந்து குருநாதருக்கு குருதக்ஷிணை வழங்கி அரிசியால் ஹரி ஸ்ரீ கணபதயே நமகா என்ற முதலெழுத்து எழுதி கல்விக்கற்றவாறு உள்ளனர். இதற்காக குருமட நிர்வாகத்தினர் கவனம் செலுத்தி வருகின்றனர். குருமடத்தில் குழந்தையினர் கல்வி ஆரம்பம் குறிப்பதற்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எடுத்து நீண்ட வரிசையாகநின்று வித்யாரம்பத்தைத் தொடங்கிவாறு உள்ளனர். 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு முதற்கல்வி எழுதி கற்றனர்.

The post சித்தூர் துஞ்சத்து எழுத்தன் குருமடத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: