உப்பட்டியில் ரத்த தான முகாம்

 

பந்தலூர், ஜூன் 24: பந்தலூர் அருகே உப்பட்டியில் நெலாக்கோட்டை வட்டார சுகாதார நிலையம், கூடலூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் த சில்ரன் எஸ்ஓய்எஸ்எஸ் அமைப்பு ஆகியன இணைந்து ரத்த தான முகாமினை நடத்தியது. இதனை வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், கொளப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அமீன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

எஸ்ஓய்எஸ் மாவட்ட செயலாளர் ஐமுட்டி தலைமை தாங்கினார். நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம், ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஸ்டர்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ குழுவினர் மஞ்சு, வசந்த், திலகராஜ், நாராயண மூர்த்தி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர், தானமாக வழங்கப் பட்ட ரத்ததினை சேகரித்தனர்.

தொடர்ந்து முகாமில் ரத்த வகை பரிசோதனையும் செய்யப்பட்டது. முகாமில் 20க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். 50க்கும் மேற்பட்டோர் ரத்த கொடையாளர்களான பதிவு செய்து கொண்டனர். அவசர தேவைக்கு ரத்தம் வழங்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள், உப்பட்டி எஸ் ஒய் எஸ் நிர்வாகிகள் சுகைல், கபீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post உப்பட்டியில் ரத்த தான முகாம் appeared first on Dinakaran.

Related Stories: