ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவம், அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம்

 

ஊட்டி, ஜூன் 24: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பாக மாபெரும் இலவச மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம் வரும் 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊட்டியில் உள்ள தேவாங்கர் கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் மகளிர் மருத்துவம், எலும்பியல், வயிறு மற்றும் குடல், நரம்பியல், சிறுநீரகவியல், பல், இருதயம், நுரையீரல் போன்ற துறைகளுக்கான மருத்துவ நிபுணர்களால் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படவுள்ளது.

இம்முகாமின் சிறப்பு அம்சங்களாக, அறுவை சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு 25 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்படவுள்ளது. மேலும், சராசரி இரத்த சர்க்கரை அளவு, பிஎம்ஐ, ரத்த அளவு ஆகியவற்றிற்கு இலவச பரிசோதனை அளிக்கப்படுகிறது. தேவைப்படுவோருக்கு சிறப்பு கட்டண சலுகையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற சலுகை வழங்கப்பட்டுள்ளது. மாபெரும் இலவச மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாமில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் துறைசார் மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

The post ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவம், அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: