வாழத்தார் விலை பல மடங்கு உயர்வு

 

பொள்ளாச்சி, ஜூன் 24: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டிலிருந்து கேரளாவுக்கு வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு செல்வது அதிகரித்துள்ளது. இதனால், வாழைத்தார்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெறும். சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் அதிகளவு ஏலத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த, இரண்டு வாரமாக தூத்துக்குடி மற்றும் திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார் வரத்து சற்று அதிகமாக இருந்தது. நேற்று நடந்த சந்தை நாளில் பொள்ளாச்சி அதன் சுற்று வட்டார கிராமம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்தது.

மேலும், வாழைத்தார்களின் வரத்து அதிகமாக இருந்ததால் சுமார் 60 சதவீத வாழைத்தார்கள் கேரள மாநிலத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில், செவ்வாழைத்தார் (ஒரு கிலோ) ரூ.60 முதல் ரூ.66 வரையிலும், கற்பூரவள்ளி ரூ.38க்கும், பூவந்தார் ரூ.36க்கும், கதளி ரூ.58க்கும், மோரீஸ் ரூ.36க்கும், கேரள ரஸ்தாளி மற்றும் நேந்திரன் ஒரு கிலோ ரூ.48க்கும் ஏலம் போனதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

The post வாழத்தார் விலை பல மடங்கு உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: