சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து 20, 21ம் தேதிகளில் கருத்து தெரிவிக்கலாம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:  கடலூர்  மாவட்டம் சிதம்பரம் சபாநாயகர் (நடராஜர்) கோயில் குறித்து விசாரணை மேற்கொள்ள  தமிழ்நாடு இந்து சமய அறநிலைய அறக்கொடைகள் சட்டத்தின் சட்டப்பிரிவு 23  மற்றும் 33ன் படி ஆணையாரால் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவிடம், கோயில்   நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை  தெரிவிக்கலாம். வருகிற 20 மற்றும் 21ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3  மணி வரை துணை ஆணையர்/ஒருங்கிணைப்பாளர், விசாரணைக்குழு,  இணை ஆணையர்  அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையம்,  கடலூர்-607001 என்ற அஞ்சல் முகவரியில் நேரில் சென்று கருத்துக்களை  தெரிவிக்கலாம். vocud.hrce@tn.gov.in  என்கிற மின்னஞ்சல் மூலமாகவும் 21ம்  தேதி மாலை 3 மணிக்குள் அனுப்பலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து 20, 21ம் தேதிகளில் கருத்து தெரிவிக்கலாம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: