சர்வதேச ஆதரவை பெறுவதில் சுணக்கம்; இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் சஸ்பெண்ட்: அதிபர் ஜெலென்ஸ்கி அதிரடி

கீவ்: சர்வதேச ஆதரவை பெறுவதில் சுணக்கமாக செயல்பட்டதாக கூறி, இந்தியா உள்பட 5 நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர்  ஜெலென்ஸ்கி இந்தியா உட்பட ஐந்து நாடுகளில் நியமிக்கப்பட்டிருந்த தனது  தூதர்களை அதிரடியாக பணிநீக்கம் ெசய்து உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் அதிபரின்  ஜெலென்ஸ்கியின் இணையதளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‘இந்தியா, ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே, ஹங்கேரி நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களை அதிபர் ஜெலென்ஸ்கி பணிநீக்கம் செய்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரைனுக்கு சர்வதேச ஆதரவையும் ராணுவ உதவிகளையும் பெருக்குமாறு தனது நாட்டு தூதர்களிடம் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ஆனால், மேற்கண்ட் 5 நாடுகள் சரியாக செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட தூதர்களுக்கு பதிய புதிய தூதர்கள் நியமனம் தொடர்பான உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….

The post சர்வதேச ஆதரவை பெறுவதில் சுணக்கம்; இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் சஸ்பெண்ட்: அதிபர் ஜெலென்ஸ்கி அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: