கோவை மாவட்டத்தில் முன்னேற்றம் தொழில் மைய மேலாளருக்கு விருது

 

கோவை, ஜூலை 4: சென்னையில் தொழில் மைய வளாகத்தில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. கோவை மாவட்ட தொழில் மைய (டிக்) மேலாளர் திருமுருகனுக்கு சிறந்த மாவட்ட பொது மேலாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தமிழக தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் விருது வழங்கினார். இதில் எம்எஸ்எம்இ செயலாளர் அருண்ராய், தொழில் துறை கமிஷனர் சிகி தாமஸ் வைத்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் தொழில் முன்னேற்றம், தொழில் கட்டமைப்பு, நீட்ஸ் திட்டத்தில் அதிக நபர்களுக்கு தொழில் துவங்க உதவி செய்தது போன்றவற்றிக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

மாநில அளவில் பல்வேறு தொழில் உள் கட்டமைப்பு, பம்பு கிரைண்டர் தொழில் மேம்பாடு போன்றவற்றில் கோவை மாவட்டம் முதன்மையான இடங்களை பிடித்துள்ளது. கொடிசியா, சைமா, சீமா, கோ இந்தியா போன்ற பல்வேறு அமைப்புகளுடன் தொழில் முன்னேற்ற திட்டங்களில் செயல்பாடுகள் கோவையில் சிறப்பாக இருக்கிறது. மாவட்ட ெதாழில் மையம் தனி நபர் தொழில் துவங்க, இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்க, பல்வேறு மானிய திட்டங்கள் பெற தொழில் முனைவோர் உருவாக உத்வேகம் காட்டி வருகிறது. இந்த செயல்பாடுகளில் கோவை மாவட்டத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட மைய மேலாளருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

The post கோவை மாவட்டத்தில் முன்னேற்றம் தொழில் மைய மேலாளருக்கு விருது appeared first on Dinakaran.

Related Stories: