கோவையில் நடந்து வரும்தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை 40 ஆயிரம் பேர் பார்த்தனர்

கோவை, ஏப். 13: கோவை வஉசி மைதானத்தில் \”எங்கள் முதல்வர்-எங்கள் பெருமை\” என்ற தலைப்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு பற்றிய புகைப்பட கண்காட்சி கடந்த 7-ம்தேதி துவங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த புகைப்பட கண்காட்சியை தினமும் பல ஆயிரம் பேர் கண்டுகளித்து வருகின்றனர். கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கணபதி செல்வராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், நிர்வாகிகள் சேதுபதி, வக்கீல் சூரி.நந்தகோபால், ஆடிட்டர் அர்ஜூனராஜ் உள்பட பலர் நேற்று இந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் 6 ஆயிரம் பேர் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். கடந்த 6 நாட்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ-மாணவிகள் இந்த கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர். கண்காட்சி வளாகத்தில், தினமும் மாலையில், பல்வேறு இசை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இக்கண்காட்சி நாளை (வெள்ளி) மாலை நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக் (கோவை மாநகர்), தளபதி முருகேசன் (கோவை தெற்கு), தொண்டாமுத்தூர் ரவி (கோவை வடக்கு) உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.

The post கோவையில் நடந்து வரும்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை 40 ஆயிரம் பேர் பார்த்தனர் appeared first on Dinakaran.

Related Stories: