இடிகரை பேரூராட்சியில் ரூ.5 கோடி மதிப்புள்ள பணிகளை கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு

கோவை, ஜூலை 7: கோவை காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் 29-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டிஜிஎஸ் தினகரன் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய தொழில்நுட்பக்கழகத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.எஸ் மன்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன், மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய ரயில்வே போர்டின் உறுப்பினரும் முன்னாள் டெல்லி மெட்ரோ திட்டத்தின் நிர்வாக இயக்குனருமான ஸ்ரீதரனின் சேவைகளை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரிச்சி சுரேஷ் (பி.டெக் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ்), குரம் ஆகாஷ் (பி.டெக் ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன்), சாமுவேல் (பி.எஸ்.சி இன்பர்மேஷன் செக்யூரிட்டி அண்ட் டிஜிட்டல் ஃபார்ன்சிக்), காவியா (எம்.டெக் பையோ மெடிக்கல் இன்ஸ்ட்ருமென்டேஷன்) ஹர்ஷினி (பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர்) ஆகியோர் சிறந்த மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன், துணைவேந்தர் பிரின்ஸ் அருள்ராஜ் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post இடிகரை பேரூராட்சியில் ரூ.5 கோடி மதிப்புள்ள பணிகளை கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: