கோயில் நிலங்களில் குடியிருப்பவர்கள் வாடகை கட்ட ஒப்பு கொண்டால் வீடு கட்ட அனுமதி: உறுப்பினர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்

சென்னை: கோயில் நிலங்களில் குடியிருப்பவர்கள் கோயிலுக்கு வாடகை கட்ட ஒப்புதல் அளித்தால் அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி அளிக்கப்படும் என்று உறுப்பினர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.  தமிழக சட்டப் பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்ைக மீதான விவாதத்தில் கலந்து கொண்டு வேளச்சேரி தொகுதி உறுப்பினர் அசன் மவுலானா(காங்கிரஸ்) பேசியதாவது: கோயில் சொத்தில் வாழ்ப்பவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த ஆட்சியில் வாடகையை உயர்த்துவதாக கூறினார்கள். தற்போதைய அரசு, கோயில் நிலங்களில் வாழ்பவர்களை வாடகை கட்ட சொல்கிறார்கள். அமைச்சர் சேகர்பாபு: கோயில் நிலங்களில் குடியிருப்பவர்கள் கோயிலின் வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, முழுமையாக ஆக்கிரமித்திருப்பவர்களின் வாழ்வாதார நிலை கருதி, முதல்வரின் அறிவுரைப்படி அவர்களை 78 சட்டத்தை பயன்படுத்தி அகற்ற வேண்டாம். அவர்களை உள் வாடகைதாரர்களாக கொண்டு வரும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அசன் மவுலானா: கிராம நத்தத்தில் வாழும் ஏழை, எளிய மக்கள் மின்சார இணைப்பு வாங்க வேண்டும் என்றால் முடியவில்லை. அமைச்சர் சேகர்பாபு: நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு மனிதாபிமான அடிப்படையில், குடியிருப்பவர்கள் ஒருவரை கூட நாங்கள் அகற்றவில்லை. நீங்கள் கூறுபவர்கள் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் இருக்கிறார்கள். அவர்கள் கோயில் வாடகை தாரர்கள் கூட ஆகவில்லை. அவர்களுக்கு எப்படி கோயில் சார்பாக மின்சார இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்க முடியும். எனவே, அவர்களை கோயில் வாடகைதாரர்களாக ஆக சொல்லுங்கள். உடனடியாக தடையில்லா சான்று வழங்கப்படும்.  …

The post கோயில் நிலங்களில் குடியிருப்பவர்கள் வாடகை கட்ட ஒப்பு கொண்டால் வீடு கட்ட அனுமதி: உறுப்பினர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் appeared first on Dinakaran.

Related Stories: