கோத்தகிரியில் வடிநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரம்

 

கோத்தகிரி, டிச.2: கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த வாரம் மிக கன மழையும், மிதமான மழையும் பெய்தது. இதனால் கோத்தகிரி, கீழ்கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழுந்து சேதமடைந்தன. இதனை தொடர்ந்து, கற்கள், மரத்துண்டுகள் உள்ளிட்டவைகள் மழை நீரில் அடித்து சென்று வடிநீர் கால்வாய்களில் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கோட்ட பொறியாளர் குழந்தைராஜ், உதவி கோட்ட பொறியாளர் சங்கர்லால், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் சாலை ஆய்வாளர்கள் ஜெயக்குமார், சேகர், சிவக்குமார், கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கோத்தகிரியில் இருந்து குன்னூர், உதகை செல்ல கூடிய நெடுஞ்சாலை, கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய நெடுஞ்சாலை மற்றும் கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லக்கூடிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள அடைப்பு ஏற்பட்டுள்ள சாலையோர வடிநீர் கால்வாய்களை ஆய்வு செய்து அவற்றில் உள்ள மண், கற்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் கோத்தகிரி நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post கோத்தகிரியில் வடிநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: