கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு மாணவ- மாணவிகள் உற்சாகம்

நாகர்கோவில், ஜூன் 20: கோடை விடுமுறைக்கு பின்னர் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு வருகை தந்தனர். தமிழ்நாட்டில் கடந்த கல்வியாண்டு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தொடர்ந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நடப்பு கல்வியாண்டில் 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.

அந்த வகையில் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் வருகின்ற குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கலை அறிவியல் கல்லூரிகளில் 2, 3ம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கின. இரண்டு ஷிப்ட்களாக நடைபெறும் கல்லூரிகளில் காலை 8 மணிக்கே வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவ மாணவியர் உற்சாகத்துடன் வருகை தந்தனர்.

The post கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு மாணவ- மாணவிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: