கோகுலாஷ்டமியையொட்டி கிருஷ்ணதர்ஷன் கண்காட்சி பூம்புகாரில் துவக்கம்

 

ஈரோடு,ஆக.27: கோகுலாஷ்டமியையொட்டி ஈரோடு பூம்புகாரில் கிருஷ்ணதர்ஷன் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று முதல் தொடங்கப்பட்டது. கோகுலாஷ்டமி(கிருஷ்ண ஜெயந்தி) வருகிற செப்டம்பர் 6ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழக அரசு நிறுவனமான ஈரோடு மேட்டூர் சாலையில் அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே இயங்கி வரும் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கிருஷ்ணதர்ஷன் கண்காட்சி விற்பனை நேற்றுமுன்தினம் முதல் துவங்கியது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனை வருகிற 6ம் தேதி வரை நடக்க உள்ளது.

இதுகுறித்து மேலாளர் சரவணன் கூறியதாவது:சேலம், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு பகுதியில் உள்ள கைவினை கலைஞர்கள் செய்த பொம்மைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காகித கூழ் கிருஷ்ணர், களிமண் கிருஷ்ணர், பஞ்சலோக கிருஷ்ணர், பித்தளை கிருஷ்ணர், மார்பிள் பவுடரால் செய்யப்பட்ட கிருஷ்ணர், அலிகார் பித்தளை கிருஷ்ணர் சிலைகள், தஞ்சை ஓவிய கிருஷ்ணர், பஞ்சலோக கிருஷ்ணர் டாலர் போன்றவை விற்பனைக்கு உள்ளன. இந்த கண்காட்சியில் ரூ.150 முதல் ரூ.20ஆயிரம் மதிப்பிலான சிலைகள் உள்ளன. குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து வகையான கடன் மற்றும் பற்று அட்டைகள் சேவை கட்டணம் இன்றி ஏற்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கோகுலாஷ்டமியையொட்டி கிருஷ்ணதர்ஷன் கண்காட்சி பூம்புகாரில் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: