கொள்ளிடம் அருகே வயலில் தாழ்வாக தொங்கிய மின் கம்பிகள் அகற்றம்

 

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குட்டியாவெளி கிராமம் உள்ளது. இங்கு வயல் பகுதியில் மின் மோட்டார் இணைப்புக்காக மின் கம்பங்கள் மூலம் மின்கம்பி சென்று கொண்டிருந்தது. இங்கு உள்ள நிலப்பகுதி கடந்த சில வருடங்களாக பயிர் சாகுபடி செய்யாமல் நிலங்கள் தரிசாக கிடந்தன. இதனால் தண்ணீர் தேவை படாததால் மின் மோட்டாருக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் எந்த பயனும் இன்றி மின்கம்பிகள் வயலில் தாழ்வாக தொங்கி கொண்டிருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி மின்வாரிய செயற்பொறியாளர் விசுவநாதன், கொள்ளிடம் பொறுப்பு உதவி பொறியாளர் உமாமகேஸ்வரி மற்றும் மின்வாரிய அலுவலர்கள் ஊழியர்கள் நேற்று சம்பவ இடத்துக்கு வந்து மின் கம்பிகளை அகற்றினர்.

100 நாள் வேலையை அமைச்சர் துவக்கி வைத்தார் ஜிப்மர் மருத்துவமனையில் 5ம் தேதி வெளிப்புற நோயாளி சிகிச்சை பிரிவு இயங்காது காரைக்கால்: ஜிப்மர் மருத்துவமனையில் 5ம் தேதி வெளிப்புற நோயாளி சிகிச்சை பிரிவுகள் இயங்காது என்று அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு விடுமுறை தினமான வரும் 5ம் தேதி புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுகள் இயங்காது. எனவே 5ம் தேதி நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கொள்ளிடம் அருகே வயலில் தாழ்வாக தொங்கிய மின் கம்பிகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: