கொடைக்கானலில் காட்டுமாடுகள் நுழைவதை தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பு

கொடைக்கானல் : கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டுமாடுகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன. இவை தாக்கியதில் பலர் படுகாயமடைந்து உள்ளனர். சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதனால் காட்டுமாடுகளை நிரந்தரமாக வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் வனத்துறை சார்பில் காட்டுமாடுகள் நகர் பகுதிக்குள் நுழைவதை தடுக்க ஈக்கோ வாட்சர்ஸ் என்ற 30 பேர் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவர். காட்டுமாடுகளை நகர் பகுதிக்குள் நுழைய விடாமல் தடுப்பதுடன், நகருக்குள் நுழையும் காட்டுமாடுகளை வனப்பகுதிக்குள் சென்று விடும் பணியிலும் ஈடுபடுவர். காட்டுமாடுகளை கண்காணிப்பதற்கு இக்குழுவினருக்கு வனத்துறை சார்பில் வாகனம், இரவு ரோந்து பணிக்கு டார்ச்லைட் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகமுள்ள கொடைக்கானல் எம்எம் சாலை, பஸ்ஸ்டாண்ட், சிவனடி சாலை, கோகினூர் சாலை, குறிஞ்ச் ஆண்டவர் சாை, படகு குழாம் நேதாஜி நகர், ஏரி, பெர்ண் ஹில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இக்குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் பொதுமக்கள் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்த தகவல்களை வனத்துறைக்கு உடனே தெரிவிக்கலாம். இத்தகவலை வனத்துறை ரேஞ்சர் செந்தில்குமார், வனவர் அழகுராஜா தெரிவித்தனர்….

The post கொடைக்கானலில் காட்டுமாடுகள் நுழைவதை தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: