கொடைக்கானலில் கடைகளை உடைத்து யானைகள் அட்டகாசம்

கொடைக்கானல், அக். 9: கொடைக்கானலில் காட்டுயானைகள் புகுந்து கடைகளை உடைத்து அட்டகாசம் செய்து வருவதால் வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. கொடைக்கானலுக்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். கொடைக்கானல் மோயர் சதுக்கம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காட்டு யானைகள் புகுந்து கடைகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தின.

இதனால் மோயர் சதுக்கும் பகுதிக்க சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. காட்டு யானைகள் பேரிஜம் பகுதிக்கு இடம் பெயர்ந்ததை தொடர்ந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க சுற்றுலா இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு மோயர் சதுக்கம் பகுதியில் காட்டுயானைகள் புகுந்து கடை ஒன்றை சேதப்படுத்திள்ளது. இதனால் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் நபர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே யானை கூட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொடைக்கானலில் கடைகளை உடைத்து யானைகள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Related Stories: