கேளம்பாக்கத்தில் குடியிருப்புகளில் வடியாத வெள்ளம்: ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கேளம்பாக்கம் ஊராட்சியில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக வெள்ள நீர் வெளியேற முடியாமல் சாலையிலேயே தேங்கி உள்ளது. குறிப்பாக கேளம்பாக்கம், சாத்தங்குப்பம் ஆகிய இரு கிராமங்களிலும் அஜீத் நகர், சொக்கம்மாள் நகர், சீனிவாசா நகர், சண்முகா நகர், குமரன் நகர், சாமுண்டீஸ்வரி நகர், ரேணுகாம்பாள் நகர், சுசீலா நகர், நந்தனார் நகர், கே.எஸ்.எஸ். நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வீட்டு மனைப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் கட்டப்பட்டுள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்களில் இருந்து ஆகிய குடியிருப்பு களில் இருந்து கழிவு நீர் சாலையிலேயே விடப்படுகிறது. முறையான வடிகால்வாய் வசதி செய்து தரப்படாததால் தையூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் தொடர்ச்சியான மழை நீரினால் இந்த வீட்டு மனைப்பிரிவுகளில் தண்ணீர் வெளியேற முடியாமல் தெருவிலேயே தேங்கி நிற்கிறது. இதுகுறித்து கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் அளித்த தகவலின் பேரில் திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் பஞ்சு, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன் ஆகியோர் மழை நீர் தேங்கி நின்ற தெருக்களை பார்வையிட்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் தற்காலிக கால்வாய் தோண்டி தேங்கிக்கிடக்கும் வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் உத்தரவிட்டனர். மேலும், சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் தெருக்களில் மழை நீர் வடிகால்வாய் வசதி செய்து தருவதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். …

The post கேளம்பாக்கத்தில் குடியிருப்புகளில் வடியாத வெள்ளம்: ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: