கேரளாவில் சில்வர் லைன் ரயில் திட்டத்திற்கு எதிர்ப்பு

கேரளா: கேரளாவில்  சில்வர் லைன் ரயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மலப்புறம் மாவட்டத்தில் பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர், கேரளாவில் காசர்கோடு முதல்  திருவனந்தபுரம்  வரை சில்வர் லைன் என்று பெயரிடப்பட்ட ரயில் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த  அரசு திட்டமிட்டுள்ளது.சுமார்  400 கி .மீ தூரத்துக்கு சுமார் 64ஆயிரம்கோடி ரூபாய்  செலவில் இந்த திட்டம் அமையுள்ளது, இது மக்களுக்கு பயனற்ற திட்டம் என ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில் நிலத்தை கையகப்படுத்தினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்  என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதன் ஒரு பகுதியாக மலபுரத்தில் பொதுமக்களும் , விவசாயிகளும் தாமரை மலரை கையில் ஏந்தி போராட்டத்தில்  ஈடுபட்டனர், காசர்கோடு முதல்  திருவனந்தபுரம்  இடையே தற்போது உள்ள ரயில் பாதையில் அதிவிரைவு ரயில் இயக்கப்படுவதன் மூலம் போக்குவரத்து நேரம் குறைக்கலாம் என பாஜக  நிர்வாகி சம்பூர்ணா என்பவர் தெரிவித்தார், ஆளும் கட்சி சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும் போது  கே-லைன் திட்டத்தால் எதிர்காலத்தில் மக்களின் பயனும் எளிதாகும்  என்றார். …

The post கேரளாவில் சில்வர் லைன் ரயில் திட்டத்திற்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: